வலைபதிவில் அனைவரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு (என்ன கொடும சரவணன் இது!) இந்த மாதிரி படங்களா தூக்கி வச்சி எழுதுறாங்க… ஆனா, படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரியான படங்கள பத்தி யாரும் எழுதுற மாதிரி தெரியல. கொடுரமான படங்கள பாக்கிறத விட காமெடியான படங்கள் பாக்கறது மனசுக்கு சந்தோழத்த கொடுக்கும்.
இந்தவகையில 1988-ல வெளிவந்த The Naked Gun: From the Files of Police Squad! பட்ம முழுக்க முழுக்க காமடி கலந்த ஆக்ஸன் படம். மிஸ்டர்.பீன் வகை படங்கள இரசிச்சு பாக்கிறவர நீங்க இருந்தீங்கின கண்டிப்பா இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். மிஸ்டர்.பீனே இந்த படத்துல இருந்து காப்பி அடிச்சிருப்பாரோனு, சொல்ற அளவுக்கு அதில் வருவது போலவே காமெடி இந்த படத்திலும் இருக்கு.
படத்தோட ஒன்-லைன் ஸ்டோரி:
Detective Frank Drebin – ஒரு போலிஸ் அதிகாரி கிட்டத்தட்ட சூப்பர் போலிஸ் மாதிரி, அமெரிக்காவுக்கு வர Queen Elizabeth II – வ கொல்ல அமெரிக்க போலிஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தே வில்லன் வராரு. இத ஷீரோ எப்படி கிறுக்குதனாமா தடுக்குறாரருங்கறதுதான் கதை.
Detective Frank Drebin :
படத்தோட ஹைலைட்டே ஹீரோவும், அவர் பண்ற காமெடியும் தான். Frank Drebin –னா Leslie Nielsen நடிச்சிருக்காரு. முகத்த வச்சே காமெடி பண்றாரு. இந்த படத்துல நடிக்கும் போது இவருக்கு வயசு 62 (According to Wikipedia !) இந்த வயசுல இருக்குற நம்ம ஊரு இரஜினி, ஜஸ்வர்யாராய் கூட டூயட் பாடுறாரு. பறந்து பறந்து டூப் போட்டு சண்ட போடுறாரு. (முடியல….!)
ஆனா, Leslie Nielsen இப்படியெல்லாம் லொள்ளூ பண்ணாமா காமெடிய மட்டும் முக்கியமா வச்சி எடுத்து இருக்காங்க. இந்த படத்துல ஒவ்வொரு சீனுமே காமெடியாதான் இருக்கும். ஒரு டயலாக் நீங்க பாக்காம விட்டுடீங்கனாலும் அங்க ஒரு காமெடி போய்டும்.
படத்தோட முதல் எழுத்து போடற சீனே, போலிஸ்னு பேர வச்சிகிட்டு எங்கயெல்லாம் ஜாலியா சுத்தலாம்னு சொல்வது போல இருக்கும்.
டிடைய்லர்:
The Naked Gun 2½: The Smell of Fear (1991):
முதல் பார்ட்ல இருந்த எல்லா கேரக்ட்டருமே, செகண்ட் பார்ட்லயும் வராங்க. ஆனா எதுக்கு 3 வருஷம் கழிச்சு எடுத்தாங்கனு தெரியல. இந்த படத்துல வர பர்ஸ்ட் சீனையே பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
படத்தோட ஒன்-லைன் ஸ்டோரி:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்.புஸ் புது national energy policy –ய கண்டுபிடிக்க சொல்லி Dr. Albert S. Meinheimer கிட்ட சொல்றாரு. வில்லன்க Dr. Albert S. Meinheimer பதில அவர போல ஒரு டூப் போட்டு புது national energy policy மாத்த பாக்குறாங்க. அத ஹீரோ எப்படி கண்டுபிடிக்குறாருங்கறதுதான் கதை.
இந்த படத்தோட ஹீரோயின்:
Priscilla Presley as Jane Spencer ரொம்ப அழகு. அதே நேரத்துல ரொம்ப அழகா நடிக்கிறாங்க. எனக்கு ஹீரோயின் பத்தியெல்லாம் வர்ணிக்க தெரியல, படத்த பார்த்துட்டு நீங்களே சொல்லுங்க. ஆனா, அவங்களோட பச்சை நிற கண்கள் ரொம்ப அழகு. இதுக்குனே இந்த படத்த ரெண்டு டைம் பாக்கலாம்.
டிரைய்லர்:
Naked Gun 33⅓: The Final Insult (1994)
Leslie Nielsen – இவருக்கு வயசே ஆகாது போல இவரோட முதல் படம் 1956 – 2011-லயும் இவருக்கு ஒரு படம் வர போகுது. இவரோட படங்கள மட்டுமே தொகுத்து ஒரு பதிவ போடணும் போல.
மற்ற ரெண்டு பார்ட்டுகள போல இந்த படமும் மச காமெடிதான்.
டிரெய்லர்:
பி.கு: என்னடா இவன் கதைய ஒழுங்காவே எழுதலயேனு பார்க்குறீங்களா? இந்த மாதிரி நல்ல காமெடியான படங்கள் கதை, கேமரா ஆங்கிள் லொட்டு லொசுக்கு எல்லாம் தெவையேயில்லை.
3 comments:
டிவிடி கடையில் பல முறை இந்த டிவிடியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வாங்கவில்லை.. பார்க்கத் தூண்டிட்டீங்க...மிஸ்டர் பீன் பரம ரசிகன் நான்.
நன்றி. பிற்கால Leslie Nielsen படங்கள் எல்லாமே காமெடி படங்கள்தான். அவரோட படங்கள் வரிசைய தேடி பார்த்துகிட்டு இருக்கேன். நீங்களும் கிடைச்சா பாருங்க.
I'm a fan of Leslie Nielsen's comedy. You'll never regret buying Naked Gun dvds.
Post a Comment
ஒட்டு போடுங்கள் என்று பிச்சை எடுக்க விரும்பவில்லை.