இதுவரையில் தமிழில் பல தளங்கள் ஆரம்பித்து, எனக்கு பிடிக்காமல் எழுதாமல் போயிருக்கிறேன். அதற்க்கு பல காரணங்கள் உண்டு (யாருமே படிக்க வரல… அதானே மாமு!). ஆனால் என் மனம் மீண்டும் மீண்டும் எழுதவே தோண்றுகிறது. Circle of Life போல, அதனால மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன் (நீ அடி வாக்காம போக மாட்ட போல?)
Yamaha RD350 இந்த பைக் பற்றி சில பேருக்குதான் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
1980 – களில் வந்த ஜப்பான் தயாரிப்பான Yamaha RD350 இந்தியாவில் Rajdoot 350 என்ற பெயரில் அறிமுகமானது. எஸ்கார்ட் குருப் கம்பெனி இந்த பைக்கை தயாரித்தது. ஜப்பானில் மிகவும் பிரபலமான Yamaha RD350B வைகை பைக்குகளை எஸ்கார்ட் கம்பெனி இந்தியாவுக்கு ஏற்ற வகையில் தயாரித்து வெளிவிட்டது.
இந்த பைக் அந்த காலகட்ட அதிவேக பைக்குகளான RoyalEnfield Bullet 350, Yezdi Roadking 250 ஆகியவற்றிற்க்கு போட்டியாக களமிறக்கப்பட்டது.
RD350-யின் முதல் எடிசன் HT (அதாவது High Torque) 30.5 Bhp திறன் கொண்டது. மணிக்கு சுமார் 165 Km/Hr வேகம்!. டிவின் சிலிண்டர்கள் கொண்ட இந்த வண்டி இஞ்சின், 347CC, 6 ஸ்பீடு திறன் கொண்டதாக இருந்தது.
ஆனால், இதன் புயல் வேகமே இந்த வண்டி விற்பனைக்கு தடையாக அமைந்தது, 1980-ன் ஆரம்பகாலத்தில் வந்த இந்த வண்டியின் வேகம் இந்தியர்களுக்கு புதிதாக இருந்தது. முதலில் இந்திய போலிஸ் துறைக்கு திருடர்களை வேகமாக துரத்தி பிடிப்பதற்க்காக அறிமுகப்படுத்த பட்ட இந்த வண்டியை ஓட்டுபதற்க்கே திறமையானவர்கள் தேவைபட்டார்கள். இதனால் அதிகமாக இந்த பைக் விபத்துக்குள்ளானது. இதனால இந்த பைக் “Rapid Death” என்று பலராலும் அழைக்கப்பட்டது.
இந்த சமயத்தில்தான் ஷீரோ ஹோண்டோவின் 100CC பைக்கான CD100 அறிமுகப்படுத்தப்பட்டது. “Fill it, Shut it, Forget it” என்ற விளம்பர வாசங்களை கொண்டு இந்த வண்டி மிக பிரபலமானது. இதற்க்கு அர்த்தம் அப்போது வந்த Yamaha RD350 லிட்டருக்கு 6 முதல் 25 கி.மீ வரையே மைலேஜ் கொடுத்தது.
இதற்க்கு எதிராக Yamaha கம்பெனியும், “For the few who dared to Dream and be different” என்று தன் பங்கிற்க்கு விளம்பரம் செய்தது. ஆனால் அப்போதைய ஏழை இந்தியாவால் அதிக செலவு கொண்ட இந்த வகை பைக்குகளை அதிகம் வாங்க முடியாமல் போனது. அதனால் இதன் 1990 களிலே நின்றுவிட்டது.
Yamaha பைக் என்றாலே ஒரு தனி கம்பீரமும், மிடுக்கும், அதன் சத்தமும் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இந்த பைக் ஒரு அழகிய ராட்ஸசன் என்றே சொல்லலாம்.
இந்த பைக் இப்போது சில பேரிடமே இருக்கிறது. பைக் மார்க்கட்டில் நான் தேடும் போது ரூபாய்.100000 -க்கும் குறையாமல் விலை இருந்தது. ஆனாலும் (இந்த பைக்க எப்படியாச்சும் வாங்கி ஓட்டனும்… ஆசை இருக்கு.. ஆனா, முடியல) இந்த பைக்க வாங்க நீ, நான்னு போட்டி இருக்கதான் செய்கிறது.
Yamaha RD350 Specification:
| General information | |
| Model | Yamaha RD350B |
| Year | 1983 |
| Category | Classic |
| Displacement | 347.00 ccm (21.17 cubic inches) |
| Engine type | Twin, two-stroke |
| Power | 30.50 HP (22.3 kW)) |
| Bore x stroke | 64.0 x 54.0 mm (2.5 x 2.1 inches) |
| Fuel system | Carburettor |
| Cooling system | Air |
| Gearbox | 6-speed |
| Transmission type,final drive | Chain |
என் Personnel Comment:
இந்த பைக்க அடிச்சிக்க ஆளே இல்லீங்க, கடந்த 25 வருஷம, இந்த பைக்கோட ஸ்பீட இப்ப வந்த Bajaj Pulasr 220, Hero Honda Karishma எல்லாம் பக்கத்துலே நிக்க முடியாது. ஆனா, என்ன இந்த பைக்குக்கு பெட்ரோல் போட்டுதான் முடியாது, வடிவேலு படத்துல வர மாதிரி ஊத்தி ஓடிகிட்டு இருக்குல்ல”னுதான் சொல்லனும். அதிகமா பெட்ரோல போட உங்ககிட்ட காசு இருந்த இந்த பைக் வாங்கி ஓட்டுங்க ஊரே உங்கள தான் பார்க்கும். நானும் இந்த பைக்க வாங்கதான் பார்த்துகிட்டு இருக்கேன். கிடைக்க மாட்டேங்குது ஆனா சிக்கிரமா வாங்கிடுவேன்.
பி.கு: ( ) அடைப்புகுறிக்குள் இருப்பவை என் மனம் நினைப்பவை.
3 comments:
i like this bike very much . And i will own it one day. i have now rx135 5-speed and always yamaha rocks
நன்றி அக்னி. நானும் இந்த பைக் வாங்கதான் தேடி கொண்டு இருக்கிறேன்.
yes we are also searching for this bike but we will keep on searching and one fact luck is wealth
Post a Comment
ஒட்டு போடுங்கள் என்று பிச்சை எடுக்க விரும்பவில்லை.